இளம் வயதிலேயே வெள்ளை முடி வருவதற்கான காரணங்கள்!!!

இளம் வயதிலேயே வெள்ளை முடி வருவதற்கான காரணங்கள்!!!
தற்போது இளம் வயதிலேயே தலையில் உள்ள முடியானது நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. இது தற்போதைய இளம் வயதினர் சந்திக்கும் பிரச்சனைகளில் முதன்மையானவை. அதிலும் சிலரைப் பார்த்தால், அவருக்கு வயது 23 தான் இருக்கும். ஆனால் அவரது முடியைப் பார்த்தால், அது அவருக்கு வயதாகியிருக்குமோ என்ற எண்ணத்தை வரவழைத்துவிடும். இப்படி இளம் வயதில் நரைமுடி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. பொதுவாக நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து நரைமுடியை ஏற்படுத்திவிடுகிறது. நரைமுடி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? ஈஸியா சரிசெய்யலாம்... அதுமட்டுமல்லாமல் இந்த நரைமுடி வருவதற்கு இன்னும் நிறைய காரணங்கள் உள்ளன. முதலில் அந்த காரணங்களை அறிந்து கொண்டு, பின் அதற்கேற்றாற் போல் நரைமுடியைப் போக்க முயற்சி செய்யுங்கள். இப்போது நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.மரபணுக்கள் நரைமுடி வருவதற்கு பரம்பரையும் ஒரு முக்கியமான காரணமாகும். உதாரணமாக, உங்கள் வீட்டில் அம்மா அல்லது அப்பாவிற்கு இளம் வயதிலேயே நரைக்க ஆரம்பித்திருந்தால், உங்களுக்கும் நரைமுடியானது இளம் வயதிலேலே வந்துவிடும்.வைட்டமின் பி12 வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், முடிக்கு நிறத்தை வழங்கும் மெலனின் நிறமியும் குறைய ஆரம்பிக்கும். எனவே உடலில் வைட்டமின் பி12 சரியான அளவில் இருந்தால், நரைமுடி வராமல் இருக்கும். தைராய்டு தைராய்டு இருந்தாலும் வெள்ளை முடி வர ஆரம்பிக்கும். அதிலும் தற்போது நிறைய இளம் வயதினர் தைராய்டு பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கமும், வாழ்க்கை முறையும் தான். ஆகவே இவற்றில் சரியாக இருந்தால், தைராய்டு பிரச்சனையுடன், நரைமுடி பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.ஹார்மோன் ஏற்றத்தாழ்வு நிறைய பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நரைமுடியானது வரும். இதற்கு காரணம் இக்காலத்தில் ஏற்படும் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் தான்.பிட்யூட்டரி சுரப்பி முடியின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பிட்யூட்டரி சுரப்பி தான் முக்கிய பங்கினை வகிக்கிறது. எப்போது இந்த பிட்யூட்டரி சுரப்பியானது சரியாக செயல்படாமல் போகிறதோ, அப்போது முடியானது நரைக்க ஆரம்பிக்கும். அயோடின் குறைபாடு அயோடின் என்னும் கனிமச்சத்து உடலுக்கு மிகவம் இன்றியமையாதது. இத்தகைய சத்தானது குறைவாக இருந்தால், நரைமுடி வர ஆரம்பிக்கும்.இரத்த சோகை இரத்த சோகை ஏற்பட்டாலும், உடலானது பலவீனமடைந்து, முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், நரைக்க ஆரம்பித்துவிடும்.ஊட்டச்சத்து குறைபாடு ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாகவும், வெள்ளை முடியாது வர ஆரம்பிக்கும். ஏனெனில் இதனால் உடலுக்கும், முடிக்கும் வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும்.காப்பர் குறைபாடு முடியின் ஆரோக்கியத்திற்கு காப்பர் மிகவும் இன்றியமையாத கனிமச்சத்தாகும். இத்தகைய காப்பர் உடலில் குறைவாக இருந்தால், முடியானது வெள்ளையாகி, பொலிவிழந்து காணப்படும்டென்சன் அளவுக்கு அதிகமாக டென்சன் ஆகும் போது, ஸ்கால்ப்பானது பாதிக்கப்பட்டு, மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் போய், முடியை வெள்ளையாக்கிவிடும்.
ஒரே நிமிடத்தில் திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?